லஞ்சம் கொடுக்க முயன்ற மோல்டோவா நாட்டுப் பெண்ணுக்குச் சிறை

போலிஸ் அதிகாரிகள் மூவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்காக மோல்டோவோ நாட்டு பெண் ஒருவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விபசாரம் செய்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெலோவ்சோவா நட்டாலியா கடந்த மாதம் சுவிஸ் ஹோட்டல் ஸ்டாம்பர்ட்டில் கைது செய்யப்பட்டார். தம்மை விடுவிக்கக் கோரி அவர் மூன்று போலிஸ் அதிகாரிகளுக்குப் பணமும் பரிசுகளும் கொடுக்க முயன்றார். லஞ்சம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று அவரிடம் தெரிவித்தும் நட்டாலியா தமது முயற்சியைக் கைவிடவில்லை. நட்டாலியா லஞ்சம் கொடுக்க முயன்றதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் புகார் செய்யப்பட்டது. லஞ்சம் கொடுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 வெள்ளி வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!