அடையாளம் காண தனியார் துறை உதவி

செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கச் செயல் பாடு போன்ற ஆழ்ந்த தொழில் நுட்பத் துறைகளில் அடியெடுத்து வைக்கும் தொழில்நுட்ப முனைவர் களுக்கும் புதிதாகத் தொடங்கப் படும் நிறுவனங்களுக்கும் தனி யார் துறை உதவி புரியவிருக்கிறது. புதிதாகத் தொடங்கப்படும் உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி புரிய பதினேழு நிறுவனங் கள் சான்றுபெற்ற வழிகாட்டிப் பங்காளிகளாகப் பதிவு செய்திருப் பதாக ஸ்பிரிங் சிங்கப்பூர் நேற்று அறிவித்தது. இந்நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழிகாட்டி, அவற்றுக்குச் சரியான அரசாங்க நிதி ஆதரவு கிடைப் பதற்குத் துணை புரியும். வழிகாட்டிகளாகப் பதிவு செய் திருக்கும் நிறுவனங்களில் சிங்கப் பூரை மையமாகக் கொண்ட ஃபோகஸ்டெக் வென்ச்சர்ஸ் முதலீட்டு நிறுவனம், யுஓபி வங்கியும் தேசிய ஆராய்ச்சி அற நிறுவனத்தின் பிரிவும் இணைந்து தொடங்கிய தி ஃபின்லாப் மூலதன நிறுவனம், இஸ்ரேலை மையமாகக் கொண்ட டிரென்ட் லைன்ஸ் மெடிகல் சிங்கப்பூர் நிறுவனம் ஆகியன உள்ளடங்கும்.

ஸ்பிரிங் சிங்கப்பூரின் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டிப் பங்காளிகளில் ஒன்றான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 'என்டியுடிவ்' நிறுவனம் புத்தாக்கத்தை ஊக்கப்படுத்தி, தொழில்முனைப்பு மற்றும் வர்த்தகத் திறன்களை வளர்க்க உதவுகிறது. படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!