திறன் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்க ‘கோச்எஸ்ஜி’ அறிமுகம்

எல்லா நிலைகளையும் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களுக்கான கோச் எஸ்ஜி (CoachSG) கழகம் நேற்று பூகிஸின் ஜாய்டன் அரங்கில் தொடங்கிவைக்கப்பட்டது. முதல்முறையாக நடத்தப்படும் இரண்டு நாள் கோச்எஸ்ஜி மாநாட்டின் முதல் நாளன்று கழகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயிற்று விப்புத் துறையினரின் நிபுணத் துவத் திறனையும் தரத்தையும் மேம்படுத்த கோச்எஸ்ஜி ஆதரவு அளிக்கும். புதிய கழகத்தைத் தொடங்கும் திட்டம் முதன்முதலில் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 200 பயிற்றுவிப்பாளர்களுடன் ஒன்பது உரையாடல் அங்கங்கள் நடத்தப்பட்டு, அவர்களது யோ சனைகளும் அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவு பற்றிய கருத்துகளும் திரட்டப்பட்டன. கோச்எஸ்ஜி கழகமும் சிங்கப்பூர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் சங்கமும் உரையாடல் அங்கங்களை இணைந்து நடத்தின.