3வது காலாண்டில் மசே நிதி வட்டி விகிதம் மாறாது

மத்திய சேம நிதி உறுப்பினர்கள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தங்களுடைய சாதா ரண கணக்கில் உள்ள பணத் திற்கு 3.5% ஆண்டு வட்டியையும் சிறப்பு மருத்துவக் கணக்கில் உள்ள தொகைக்கு 5% வரை வட்டியையும் தொடர்ந்து பெறு வார்கள். உறுப்பினர்களின் மொத்த இருப்பில் உள்ள முதல் $60,000க்குக் கொடுக்கப்படும் கூடுதலான 1% வட்டியும் இதில் இடம்பெறும். ஓய்வு காலத்தில் உறுப்பினர் களுக்கு அதிக பண உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த அர சாங்கம் எடுத்து வரும் நடவடிக் கைகளில் ஒரு பகுதியாக இந்தக் கூடுதல் வட்டி கிடைக்கிறது.

மத்திய சேம நிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நேற்று கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன. மத்திய சேம நிதி உறுப்பினர் களுக்கு 55 அதற்கும் அதிக வயதானதும் அவர்களின் ஒட்டு மொத்தத் தொகையில் உள்ள முதல் $30,000க்குக் கூடுதலாக 1% வட்டி கிடைக்கும். இது ஒட்டுமொத்த இருப்பில் இருக்கும் முதல் $60,000 தொகைக்குக் கிடைக்கும் கூடுத லான 1% வட்டிக்கும் மேலாக வழங்கப்படுகிறது. இதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டு ஒன்றுக்கு ஓய்வுக் கணக்கில் இருக்கும் தொகை 6% வரை வட்டி ஈட்டுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!