துவாஸ் சாவடியில் 2,500 பெட்டிகள் கள்ள சிகரெட் சிக்கின

துவாஸ் சோதனைச்சாவடியில் வியாழக்கிழமை கள்ள சிகரெட் டுகள் அடங்கிய சுமார் 2,500 பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. அங்கு 31 வயது மலேசிய ஆட வர் ஒருவர் ஓட்டி வந்த 40 அடி டிரக் லாரியைச் சோதனையிடும் படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த வாகனத்துக்குள் சிகரெட்டுகள் மறைத்து வைக் கப்பட்டிருந்தது தெரிந்தது. வாகனமோட்டி, வாகனம், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் எல்லாம் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது. பிடிபட்ட கள்ள சிகரெட்டு களுக்கு செலுத்த வேண்டிய தீர்வையும் ஜிஎஸ்டி வரியும் முறையே, $194,000 மற்றும் $14,370 ஆகும்.

படம்: குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!