மோசடி செய்த முன்னாள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரி மீது குற்றச்சாட்டு

ஆவணங்களில் பொய்யாகக் கை யெழுத்திட்டது தொடர்பில் முன்னாள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அதிகாரி ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட் டப் பட்டுள்ளது. அவர் இந்த விவ கா ரத்தில் 128 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். மலேசியரான ஹியுவ் சோங் வாய், 53, சுமார் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். வீட மைப்பு, பராமரிப்புச் சோதனை அதிகாரியாகப் பணிபுரிந்த அவர் 1987ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தக் குற்றங்களைப் புரிந்தார். வீவகவின் போலியான வேலை உத்தரவு தொடர்பிலான ஆவணங்க ளில் ஹியுவ் போலி கையெழுத்தி ட்டதாக அவர் மீது குற்றம் சுமத் தப்பட்டது.

அந்த ஆவணங்களில் குறிப்பி டப்பட்டிருந்த பணிகளைக் கழக அதிகாரிகள் இருவர் சரிபார்த்து ஏற்றுக்கொண்டனர் என்று கழ கத்தை நம்பவைப்பதற்காக அவர் அவ்வாறு செய்திருந்தார். தம் மீது குற்றம் சாட்டப் படுவதற்கு முன்னர் 1987ல் ஹியுவ் சிங்கப்பூரை விட்டு ஓடிப் போய்விட்டார் என்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மலேசியாவின் சிரம்பானில் கடந்த வியாழன் அன்று மலேசிய அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!