தமிழ் முரசு ‘ஃபுட்சால்’ காற்பந்துப் போட்டி 2017: திறன்களை நிரூபிக்கும் தளம்

பள்ளி முடிந்து நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து காற்பந்து விளை யாடும் சிறுவர்களுக்கு சிங்கப்பூ ரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் சக மாணவர்களுடன் போட் டியிடும் அரிய வாய்ப்பு காத்திருக் கிறது. சிறுவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்; அதனுடன் அவர்கள் குழு உணர்வு, தலைமைத்துவம் போன்றப் பண்பு களை வளர்த்துக்கொள்ள வேண் டும் என்ற நோக்கத்துடன் சிறுவர் களுக்காக 'ஃபுட்சால்' காற்பந்துப் போட்டியை தமிழ் முரசு ஏற்பாடு செய்துள்ளது.

இளையர் தினமான ஜூலை 2ஆம் தேதி இப்போட்டி 48, உட்லே பார்க்கில் அமைந்துள்ள 'தி எரி னா' (பியூபி ரெக்ரியேஷன் கிளப்) வளாகத்தில் நடைபெறும். இளை யர் தினம் ஞாயிற்றுக்கிழமை வரு வதால் அடுத்த நாள் திங்கட் கிழமையன்று பள்ளிகளுக்கு விடு முறையாகும். "சிங்கப்பூரின் காற்பந்து வர லாற்றில் பல திறன்மிக்க இந்திய விளையாட்டாளர்கள் உள்ளூர் லீக் குழுக்களிலும் தேசிய காற்பந்துக் குழுவிலும் இடம்பெற்றுள்ளனர். "காலப்போக்கில் இந்தியர்களி டையே இந்த விளையாட்டு மீதான ஆர்வம் மங்கிவிட்டது. சிறு வயதி லிருந்தே அந்த ஆர்வத்தை தூண் டுவதற்காகவே இம்முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம். பிற இனத்தவரும் இந்தப் போட்டியில் பங்குபெறலாம். "அனைவரும் பங்கெடுத்து கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்ல முன்வருமாறு தொடக்கப் பள்ளி மாணவர்களை அழைக்கிறோம்," என்று கூறினார் போட்டியின் ஏற் பாட்டுக் குழுத் தலைவரும் தமிழ் முரசு இணை ஆசிரியருமான வீ.பழனிச்சாமி.

இப்போட்டிக்கு தமிழர் பேரவை யும் தேசிய காற்பந்து லீக் முதல் டிவிஷனில் விளையாடும் பாலஸ் டியர் யுனைடெட் பொழுதுபோக்குச் சங்கமும் உறுதுணையாக இருக் கின்றன. மினி என்வைரன்மண்ட் சர்வீஸ், மாடர்ன் மாண்டிசோரி போன்றவை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களும் தங் களின் ஆதரவை வழங்கியுள்ளன. 10 வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண் சிங்கப் பூரர்களும் நிரந்தரவாசிகளும் இப் போட்டியில் பங்கேற்கலாம். மொத் தம் 32 குழுக்கள் களம் இறங்கும். ஒவ்வொரு குழுவிலும் 5 விளை யாட்டாளர்கள், 3 மாற்று ஆட்டக் காரர்கள், 1 குழு நிர்வாகி ஆகி யோர் இடம்பெற்றிருப்பர்.

அனைத்து சிறுவர்களும் இப் போட்டியில் பங்குபெறுவதை ஊக் குவிக்க, போட்டியில் சேர்வதற் கான பதிவுக் கட்டணம் $40 என்று மிகக் குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடர்பான கூடுதல் விவரம் பெறவும் விண்ணப்பப் படி வங்களை பதிவிறக்கம் செய்யவும் www.tamilmurasu.com.sg அல்லது www.trc.org.sg எனும் இணையப் பக்கங்களை நாடலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் பதிவுக் கட்டணமும் ஜூன் 17 மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!