துணைப் பிரதமர் தர்மனுக்கு உயரிய மே தின கௌரவம்

தொழிலாளர் இயக்கத்தின் உயரிய விருது துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. சிங்கப்பூர் ஊழியர் களின் வாழ்க்கையை மேம்படுத்து வதில் அளித்த கடப்பாடுகளுக்காக திரு தர்மனுக்கு அந்த விருதை தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) வழங்கி கௌரவித்து உள்ளது. ‘ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்’பில் நேற்று மாலை நடைபெற்ற வருடாந் திர மே தின விருது நிகழ்ச்சியில் திரு தர்மனுக்கு கௌரவ விருதை என்டியுசி தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் வழங்கினார்.

திரு தர்மன் எப்போதும் ஊழி யர் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்ததாக என்டியுசி குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, ஊழியர்களை ஆத ரிக்கும் பல்வேறு தேசிய திட்டங் களின் பின்னணியில் அவர் செயல்பட்டிருப்பதாகவும் என்டியுசி தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பொருளியல் மாற்றத்துக்கு அவசியப்படும் அம் சங்கள் குறித்து தொழிலாளர் இயக்க வாராந்திர பதிப்பான ‘என்டியுசி திஸ் வீக்’கிடம் திரு தர்மன் தெரிவித்துள்ளார்.

என்டியுசி தலைவர் மேரி லியு, என்டியுசி தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் ஆகியோரிடமிருந்து மே தின கௌரவ விருதைப் பெற்ற துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்