நல்லாசிரியர்களைக் கௌரவிக்கும் உன்னத விருதுக்கு இன்று முதல் பரிந்துரைக்கலாம்

ரவீணா சிவகுருநாதன்

சிங்கப்பூரில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தமிழாசிரியர்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின் றனர். இலக்கியத்தின் உதவியோ டும் இலக்கணத்தின் கூறுகளைக் கொண்டும் ஆசிரியர்கள் தமிழ் மொழியை மாணவர்களுக்குக் கற்பித்து, அம்மொழி மீதான ஆர் வத்தைத் தூண்டுகிறார்கள் என் றால் அது மிகையாகாது. சிறந்த தமிழாசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழ் முரசு கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் 'நல்லா சிரியர் விருது' போட்டியை நடத்தி வருகிறது. இதற்கு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியன ஆதரவு நல்குகின்றன.

மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வரும் தலை சிறந்த நல்லாசிரியர்களைச் சிறப் பிக்கவும் அவர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்து பாராட்டி கௌரவிக்கவும் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழாசிரியர் களுக்கு வழங்கப்படும் தேசிய அளவிலான விருது என்றும் இது கருதப்படுகிறது. இவ்வாண்டுக்கான நல்லாசிரி யர் விருது நிகழ்ச்சி வரும் செப் டம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும். நல்லா சிரியர்களை விருதுக்கு முன் மொழிவது இன்றுமுதல் தொடங் குகிறது.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, மத்திய கல்வி நிலையம், சிறப்புத் தன்னாட்சிப் பள்ளிகள் ஆகிய வற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரி யர்கள் அனைவரும் இவ்விரு துக்கு முன்மொழியப்படலாம். ர்களுக்கு விருதும் முறையே $1,000, $500, $250 ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதுடன் அவர் களுடனான நேர்காணலும் கற்பித் தல் அனுபவமும் தமிழ் முரசு செய்தித்தாளில் வெளியிடப்படும்.

தமிழ்மொழியின் மீது மாணவர் களிடையே ஆர்வத்தையும் புத்து ணர்ச்சியையும் தூண்டக்கூடிய, புத்தாக்கமும் படைப்பாக்கமும் சேர்ந்த முறைகளில் கற்பித்து, மாணவர்களின் கற்றல் ஈடு பாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய, மாணவர்களின் நலனில் அக் கறை கொண்டு அவர்களிடத்தில் விரும்பத்தக்கத் தாக்கத்தை ஏற் படுத்தக்கூடிய ஆசிரியர்கள் இந்த நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி பெறுவர்.

மாணவர்கள் தமது ஆசி ரியர்களை இவ்விருதுக்குப் பரிந் துரைக்க விரும்பினால், அவர்க ளின் தெரிவுக்கான காரணங்களை விளக்கி எழுதி முன்மொழியும் படிவத்தை நிறைவுசெய்து அனுப்ப வேண்டும். மாணவர்கள் மட்டு மின்றி, பெற்றோர்கள், சக ஆசிரி யர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளித் தலைவர்கள் ஆகியோரும் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர் களைப் பரிந்துரைக்கலாம்.

முன்மொழியும் படிவங்களை ஜூலை 14ஆம் தேதிக்குள் www.tamilmurasu.com.sg இணையத்தளத்தில் நேரடியாகப் பரிந்துரைக்கலாம். மேல் விவரங் களுக்கும் இதே இணையத் தளத்தை நாடலாம். ஜூலை 14க்குப் பிறகு கிடைக்கப்பெறும் அல்லது முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. கடந்த மூன் றாண்டுகளின் வெற்றியாளர்கள் இதில் பங்கேற்க முடியாது. நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி பெறுவோரை இன்று முதல் பரிந்துரைக்கத் தொடங்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!