டெங்கி தொற்று: விழிப்புடன் இருக்க அமைச்சர் மசகோஸ் எச்சரிக்கை

சிங்கப்பூரில் டெங்கி தொற்று அதிகமாகப் பரவும் வெப்பப் பருவம் நெருங்கி வரும் வேளையில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல் கிஃப்லி கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த மாதத்திலிருந்து சிங்கப்பூரின் வெப்பநிலை அதி கரிக்கும் என்று முன்னுரைக்கப் பட்டுள்ளது. இந்த நிலை அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. வெப்ப காலத்தில் சிங்கப்பூரில் டெங்கி தொற்று அதிகம் ஏற் படுவது வழக்கம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித் துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டெங்கி காய்ச்சலால் 30,000 பேர் பாதிக்கப்படுவர் என்று எதிர் பார்க்கப்பட்டபோதிலும் 13,000 பேர் மட்டும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், இந்த ஆண்டிலும் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வாரியம் நேற்று வலியுறுத்தியது. இவ்வாண்டுக்கான தேசிய டெங்கி தடுப்பு இயக்கத்தை வாரியம் நேற்று தொடங்கி வைத்தது. கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்கும் அணுகுமுறையை கடைப் பிடிக்குமாறு பொதுமக்களை இயக்கம் ஊக்குவிக்கிறது.

டெங்கி தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களையும் கொசு விரட்டிகளையும் விநியோகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்