தனியார் வீட்டு விற்பனை கடந்த ஆண்டைவிட இரட்டிப்பானது

தனியார் வீடுகளின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த ஆண்டு இரட்டிப்பானது. ஆனால் மார்ச் மாத விற்பனை விகிதத்தைக் காட்டிலும் அது 12.6% சரிந்தது. மார்ச் மாதத்தில் விற்கப்பட்ட தனி யார் வீடுகளின் எண்ணிக்கை 1,780. ஆனால் ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 1,555க்கு இறங்கியது. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 750 தனியார் வீடுகள்தான் விற்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த எண் ணிக்கை இரட்டிப்பானது சொத்துச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் புறநகர் பகுதியில் 967 தனியார் வீடுகளும் நகரின் விளிம்பில் 558 தனியார் வீடுகளும் மத்திய பகுதியில் 30 தனியார் வீடுகளும் விற்பனையாகின. தனியார் வீட்டுத் திட்டங்களில் ஆக அதிக வீடுகள் சிக்லாப்பில் உள்ள ஃபிரேசர்ஸ் சென்டர்பாயிண்ட் சிங்கப்பூர் கொண்டோமினியத்தில் விற்கப்பட்டன. அதிலுள்ள 560 வீடுகளில் 419 வீடுகள் அறிமுகமானபோதே விற்கப் பட்டுவிட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!