யீ‌ஷூனில் கார் மோதி 10 வயது சிறுவனுக்குத் தலையில் பலத்த காயம்

யீ‌ஷூன் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் யீ‌ஷூன் ரிங் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பத்து வயது சிறுவன் ஒருவன் சாலையைக் கடக்க முயன்றபோது ஒரு கார் அவனை மோதியது. அதனால் சிறுவனக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அன்று மாலை சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே 'ஏஎக்ஸ்எஸ்' சாதனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்த 29 வயது திரு லீ, பலத்த சத்தத்துடன் காரில் மோதுண்ட சிறுவன் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பத்தைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

"விபத்துக்குப் பிறகு காரின் ஓட்டுநரான ஒரு பெண் வெளியே வந்து அந்தச் சிறுவனைப் பார்த்துவிட்டு மீண்டும் காருக்குச் சென்றதாக திரு லீ கூறினார். அந்தக் காரில் அந்தப் பெண்ணுடன் ஒரு முதியவரும் இருந்தார். "சுயநினைவுடன் தலையில் ரத்த காயங்களுடன் சாலை யில் கிடந்த சிறுவனால் எழ முடியவில்லை. பின்னர் கைக ளில் உறைகளுடன் சிலர் வந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருந்தகத்தின் மருத்துவர்கள் போல் இருந்தார்கள். அவர் கள் தாங்கள் கொண்டு வந்த சாதனத்தைய் பயன்படுத்தி சிறுவனைப் பரிசோதித்தனர்," என்றும் திரு லீ விவரித்தார். அந்த இடத்தில் பலரும் பேருந்திலிருந்து இறங்கி, கவனமில்லாமல் சாலையைக் கடப்பது வழக்கம் என்றும் அதுபோல்தான் அந்தச் சிறுவனும் சாலையைக் கடந்திருக் கக்கூடும்," என்றும் திரு லீ சொன்னார். போலிஸ் விசா ரணை தொடர்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!