வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட புதிய மின்னியல் முறை

வங்கிகள் ஒன்றுக்கொன்று வர்த்தக, நிதி விவரங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய மின்னியல் முறை ஒன்று தொடங்கப்பட்டது. அதில் சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உறுப்பினர்களாகச் சேர்வதற்கு கையொப்பமிட்டுள்ளன. சிசிஆர்மேனேஜர் என்றழைக்கப்படும் அந்த மின்னியல் முறையைப் பயன்படுத்த பேங்க் ஆப் சைனா, டிபிஎஸ் பேங், ஐசிஐசிஐ பேங்க், சுவிஸ் ரி கார்ப்பரேட் சொலுசன்ஸ், யூனிகிரடிட் ஆகிய வங்கிகள் கையெழுத்திட்டுள்ளன. இம்முறையில் சேர மேலும் பல வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.