குளோபல் இந்தியன் பள்ளியில் தீ

பொங்கோலில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும் பள்ளி ஒன்றில் நேற்று மதியம் தீவிபத்து நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தைக் கண்ட ஒருவர், அதைக் காணொளியாகப் பதிவுசெய்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பி வைத்தார். கட்டுமானப்பணி பாதி முடிந்த நிலையில் உள்ள குளோ பல் இந்திய அனைத்துலக பள்ளியில் இருந்து கரும்புகை கிளம்பியதும் பின்னர் அங்கிருந்து இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்பதும் அந்தக் காணொளி மூலம் தெரியவந் தது. நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தை எதிரேயுள்ள வீவக அடுக்குமாடி யில் இருந்து தாம் கண்டதாக குமாரி கேத்தரின் லிம் என்பவர் ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

அந்தக் கட்டடத் தில் வேலை செய்துகொண்டிருந்த கட்டுமான ஊழியர்கள், அவசர நிலை வேளை யின்போது ஒன்றுகூட வேண் டிய இடத்திற்கு விரைந்த னர். தீயணைப்பு வாகனங்கள் 4.40 மணிக்கு அங்கு வந்தது என்றும் அவர் கூறினார். தீப்பற்றியதும் மின்சாரம் துண் டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவர் தொங்குமேடையில் சிக்கிக்கொண்டதை செகுதம்ரின் என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தொங்கு மேடையில் சிக்கியவர்களை குடிமைத் தற்காப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

பொங்கோலில் கட்டுமானத்தில் இருக்கும் குளோபல் இந்திய அனைத்துலக பள்ளி. படம்: ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!