காட்டு உடும்பு கடித்தவருக்கு 43 தையல்

கொமோடோ தீவுக்குச் சென்று வன உடும்பு ஒன்றைப் பக்கத்தில் இருந்து படம் எடுக்க வேண்டும் என்று விரும்பிய லோ லீ அய்க், 68, என்ற சிங்கப்பூரர் ஓர் உடும்பை படம் எடுத்துக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து வந்த மற்றொரு பெரிய உடும்பு அவரைக் கடித்துவிட்டது. அது பற்றி அவர் தன் பிள்ளைகளிடம்கூட தெரியப்படுத்தவில்லை. ஆனால் செய்தித் தாட்களில் விவரங்கள் வெளியா னதையடுத்து பிள்ளைகளுக்கு அவரது நிலை தெரியவந்தது. பக்கத்தில் உள்ள தீவில் இருக்கும் ஃபுளோர்ஸ் மருத்துவ மனையில் அவருக்குப் 43 தையல் போடவேண்டி இருந்தது என்று வான் பாவ் நாளிதழ் குறிப் பிட்டது. திரு லோ மே 2ஆம் தேதி அந்தத் தீவுக்குச் சென்றார். சம்பவம் நிகழ்ந்ததையடுத்து பலரும் மருத்துவமனைக்கு வந்து தன்னை பேட்டி கண்டதாகவும் தன்னுடன் படம் எடுத்துக்கொண்டதாகவும் திரு லோ தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!