துவாஸ் லிங்க் ரயில் நிலையம் ஜூன் 18ஆம் தேதி திறக்கப்படும்

சிங்கப்பூரில் ரயில் வழித்தடத்தில் துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பு வழி ஜூன் 18ஆம் தேதி திறக்கப்படும். அந்த வழித்தடம் கிழக்கு=மேற்கு வழித்தடத்தை நாட்டின் மேற்கு நுனிப்பகுதி வரை நீட்டிக்கிறது. அந்த 7.5கி.மீ. வழித்தடத்தில் நான்கு ரயில் நிலையங்கள் அமைகின்றன. அவற்றில் துவாஸ் லிங்க் என்ற நிலையம் ஒன்று. இந்த மேல்மட்ட நிலையத்தில் நடைமேடைக்கு மேலே பயணச் சீட்டுக்கூடம் அமைந்திருக்கும். இதுவரையில் இத்தகைய ஏற்பாடு எந்த நிலை யத்திலும் இல்லை. இப்போது மேல்மட்ட நிலை யங்களில் எல்லாம் ரயில் நடை மேடைக்குக் கீழேதான் பயணச் சீட்டுக்கூடம் இருக்கிறது. துவாஸ் லிங்க் நிலையத்தில் அமையும் பயணச் சீட்டுக்கூடம் தரையி லிருந்து சுமார் 16 மீ. உயரத்தில் இருக்கும். ரயில் நடைமேடை சுமார் 10மீ. உயரத்தில் இருக்கும்.

துவாஸ் லிங்க் நிலையத்தில், (இடமிருந்து) நிலப் போக்குவரத்து ஆணையத்தின் திட்ட மேலாண்மை பொறியாளர் ராகுல் ரெவு, மூத்த பிரதான கட்டடக் கலைஞர் ஹாம்டி ரிசால், மூத்த திட்ட பொறியாளர் ஃபூ பெங் லிங், திட்ட துணை நிர்வாகி கோ கியா ஜுன் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!