$20,000 நகைகளை ஒப்படைத்த துப்புரவாளர்

பூகிஸ் ஜங்ஷனில் வேலை பார்க்கும் துப்புரவாளர் ஒருவர் $20,000 மதிப்புள்ள நகைகளை அவற்றின் சொந்தக்காரரான ஓர் ஆடவரிடம் ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயலை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். திரு யிப், 67, என்ற அந்த ஊழியர் சென்ற வியாழக்கிழமை பூகிஸ் கடைத்தொகுதியில் கழி வறையில் வெள்ளைநிற கைப்பை ஒன்றைக் கண்டார். அந்தப் பை திரு ஸி என்ற 36 வயது தொழி லதிபருக்குச் சொந்தமானது. பையில் தங்க நகையும் வைர மோதிரமும் பணப்பையும் இருந் தன. அந்தப் பையைப் பத்திரமாக வைத்திருக்கும்படி கேட்டு தன் நண்பர் அதைத் தன்னிடம் கொடுத்திருந்ததாக ‌ஷின் மின் டெய்லி செய்தித்தாளிடம் திரு ஸி கூறினார். அந்தப் பையை அவர் தன் பையில் வைத்துக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டார்.

அதை தன்னுடைய நண்பரிடம் திரு ஸி அன்று ஒப்படைக்கவிருந்தார். பூகிஸ் ஜங்ஷன் கட்டடத்தில் முதல்மாடியில் இருக்கும் ஆடவர் கழிவறைக்குச் சென்ற திரு ஸி, பையை அங்கேயே வைத்துவிட்டு ஒரு கூட்டத்துக்குச் சென்று விட்டார். கூட்டத்தில் கலந்துகொண் டிருந்தபோது திடீரென்று பை நினைவு வந்து கழிவறைக்கு விழுந்தடித்து அவர் ஓடினார். ஆனால் பை அங்கு இல்லை. அந்தப் பையை திரு யிப் பத்திர மாக எடுத்து வைத்திருந்தார். அதை அவர் தன்னுடைய நிர் வாகியிடம் ஒப்படைக்கவிருந்தார். அந்த நேரத்தில் திரு ஸி எதையோ பறிகொடுத்தவர் போல கழிவறையில் அங்கும் இங்கும் பரபரப்பாக அலைந்து கொண் டிருந்ததைப் பார்த்த திரு யிப், அந்தப் பை, அவருடைய பையா கத்தான் இருக்கும் என்ற முடி வுக்கு வந்தார். திரு ஸியை அணுகி அவர்தான் பையின் சொந்தக்காரர் என்பதைத் தெரிந்துகொண்டு அவரிடம் பையை திரு யிப் ஒப்படைத்தார். இதற்கிடையே, வெள்ளிக் கிழமை பூகிஸ் ஜங்ஷனுக்கு மறுபடியும் சென்ற திரு ஸி, அங்கு திரு யிப்புக்கு நன்றி தெரிவித்து அவருக்கு வெகுமதி அளித்தார்.

திரு ஸி (இடது) தவறுதலாக கழிவறையில் வைத்துவிட்ட $20,000 மதிப்புள்ள இந்த நகைகள் இருந்த பையை அவரிடம் அப்படியே ஒப்படைத்தார் திரு யிப். படம்: ‌ஷின் மின் டெய்லி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!