போலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்புத் திறன்பேசிகள்

முதல்நிலை போலிஸ் அதி காரிகள் அனைவரும் தாங்கள் கையாளும் சம்பவங்கள் பற்றி குறித்த நேரத்தில் தேவையான தகவல்களை அளிக்கக்கூடிய திறன்பேசிகளை 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள் பெறுவர். இந்த போலிஸ் திறன்பேசிகள், சிங்கப்பூர் போலிஸ் படையின் பிரத்தியேக செயலிகளுக்கான பாதுகாப்புகளைப் பெற்றிருக்கும். அந்தச் செயலிகள் வழியாகப் பரிமாறப்படும் தகவல்களை வேறெவரும் ஊடுருவிப் பெற முடியாது. தனது முகவைகளின் திறன் களை மேம்படுத்த தொழில்நுட் பத்தையும் தரவுகளையும் பயன் படுத்தும் உள்துறை அமைச்சுக் குழுவின் முயற்சிகளில் ஓர் அங்கமாக இந்தத் திறன்பேசிகள் அமைகின்றன. “அதிகாரிகள் சம்பவ இடத் துக்குச் செல்லும்போது அவர்கள் பலதரப்பட்ட தகவல்களைப் பார் வையிட முடியும். இது நிலைமை யைப் பற்றிய மேலதிக விழிப்பு ணர்வை அவர்களுக்குத் தரும்,” என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.