கடற்படைக்கு புதிய தலைவர்

சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தற்போதைய தலைவராக உள்ள ரியர் அட்மிரல் லாய் சுன் ஹான் தனது பதவியிலிருந்து விலகு கிறார். அவருக்குப் பதிலாக கடற்படை யின் துணைத் தலைவராக உள்ள ரியர் அட்மிரல் லியூ சுவென் ஹோங் அடுத்த மாதம் 18ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொள் வார் என்றும் இந்த மாற்றம் சிங்கப் பூர் ஆயுதப்படையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதி என்றும் தற்காப்பு அமைச்சு நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

புதிய நிரந்தரச் செயலாளர்கள் இதற்கிடையே, இரண்டு அமைச்சுகளுக்கு இரண்டாம் நிரந் தரச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தற்போதுள்ள இரண்டு நிரந்தரச் செயலாளர்க ளின் அமைச்சுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் பொதுச் சேவை பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. அதன்படி, 47 வயதாகும் திரு பிங் சியோங் பூன் வர்த் தக தொழில் அமைச்சின் இரண்டாம் நிரந்தரச் செயலா ளராக அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்றுக் கொள்வார். திரு பிங், இந்தப் புதிய பொறுப்புடன் தற்போது வகிக் கும் ஜெடிசி கழகத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பை யும் தொடர்ந்து கவனிப்பார். வர்த்தக தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருக்கும் திரு லோ கம் இயென் தொடர்ந்து தமது பதவியில் நீடிப்பார்.

கடற்படையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள ரியர் அட்மிரல் லியூ சுவென் ஹோங். படம்: தற்காப்பு அமைச்சு