புதிய பிராடல் மேம்பாலச் சாலை திறப்பு

புதிய பிராடல் மேம்பாலச் சாலை அடுத்த மாதம் 11ஆம் தேதியன்று அதிகாலை 6 மணிக்குத் திறக்கப்படவிருக்கிறது. இந்த மேம்பாலச் சாலையின் திறப்பு இருமுறை தாமதமாகி உள்ளது. தோ பாயோ லோரோங் 6லிருந்து பிராடல் சுரங்கப்பாதை வழியாக நேரடியாக அப்பர் சிராங்கூன் சாலை, பார்ட்லி சாலை ஆகியவற்றுக்குச் செல்ல புதிய மேம்பாலச் சாலை வகை செய்யும்.