மேம்படுத்தப்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சியகம்

தனது அதிகாரிகளுக்குப் பல்வேறு சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரவும் துப்பாக்கி சுடும் திறனை மேம்படுத்தவும் செர்ட்டிஸ் சிஸ்கோ நிறுவனம் அதன் துப்பாக்கி சுடும் உள்ளரங்கு பயிற்சியகத்தை மேம்படுத்தியுள்ளது. அதிகாரிகள் பல்வேறு சூழ் நிலைகளை எதிர்கொள்ள உதவும் வகையில் இந்த மாற்றம் செய்யப் பட்டுள்ளது மேம்படுத்தப்பட்ட பயிற்சியகம் கடந்த வாரம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. எளிதாகப் பல இடங்களுக்குத் தூக்கிச் செல்லக் கூடிய துப்பாக்கி சுடும் பாவனைப் பயிற்சி சாதனம் புதுப்பிக்கப்பட்ட பயிற்சியகத்தின் ஒரு சிறப்பு அம்சம். இந்தப் பாவனைப் பயிற்சி சாதனத்தில் துப்பாக்கிக்காரர்கள் பொதுமக்களைத் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருப்பது போன்ற பல சூழ்நிலைகள் திரை யிடப்படும். இதன் வழி அதிகாரிகள் பல்வேறு சூழ்நிலைகளை எதிர் கொள்வதற்குத் தயாராகும் வகையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடலாம்.

புதிய துப்பாக்கி சுடும் பயிற்சியகத்தில் பயிற்சிக்கான சூழலை ஏற்படுத்தித் தரும் படத்தைக் காட்டும் திரைக்கு முன்னால் பயிற்சி செய்யும் அதிகாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!