பக்கவாட்டில் சாய்ந்த லாரி

ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலை ஓரம் இருக்கும் புல்தரையில் லாரி ஒன்று நேற்று பக்கவாட்டில் சாய்ந்தது. இதன் விளைவாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். நகரத்தை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் ஈஸ்ட் கோஸ்ட் கடலுணவு நிலை யத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. லாரி விரைவுச்சாலையோரம் இருக்கும் சாக்கடைக்குள் விழுந் திருக்கலாம் என்று நம்பப்படு கிறது. புல்தரையில் சாய்ந்து கிடக்கும் லாரி குறித்து பிற்பகல் 3.45 மணிக்குத் தகவல் கிடைத் ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையோரம் இருக்கும் புல்தரையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!