பால் மாவு விலையைக் கட்டுப்படுத்த புதிய குழு

குழுந்தைகளுக்கான பால் மாவின் விலை அதிகரித்து வருவது குறித்து அக்கறை தெரிவிக்கப் பட்டுள்ளதையடுத்து, அதன் விலையைக் கட்டுப்படுத்த பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 900 கிராம் எடைகொண்ட குழந்தைகளுக்கான பால் மாவின் சராசரி விலை கடந்த பத்து ஆண்டுகளில் 120 விழுக்காடு உயர்ந்துள்ளதாகக் கடந்த மார்ச் மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியிருந்தது. மற்ற பால் வகை பொருட்கள், வீடுகளுக்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வைவிட குழந்தைகளுக்கான பால் மாவின் விலை அதிக அளவில் உயர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கான பால் மாவின் விலையைக் கட்டுப்படுத்த புதிய பணிக்குழு ஆண்டிறுதிக்குள் முக்கிய விதிமுறைகளை நடை முறைப்படுத்தும் என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!