சோதனைகளை ஊக்குவிக்க 5ஜி அலைவரிசைக் கட்டணம் விலக்கு

5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை இணையக் கட்டமைப்பிற்கான அலைவரிசைக் கட்டணத்திற்கு 2019ஆம் ஆண்டு வரை விலக்கு அளிக்கப்போவதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதிவேக கைபேசி இணையத் தொடர்பு, ஓட்டு நரில்லாத கார்களைக் கட்டுப்படுத் துவது போன்ற பொருட்களுடனான இணையத் தொடர்பு (ஐஓடி) ஆகி யவற்றின் வளர்ச்சிக்குப் புத்து ணர்ச்சி கிடைத்துள்ளது. அலைவரிசைக் கட்டணம் என் பது புதிய நவீன கண்டுபிடிப்புக் கருவிகளைச் சோதிக்க வசூலிக் கப்படுவதாகும். ஐந்தாம் தலைமுறை சேவை களின் அருகே சிங்கப்பூரை முன் னெடுத்துச் செல்வதற்கு நடப்பி லுள்ள அலைவரிசை ஒதுக்கீட்டை யும் அதற்கான ஒழுங்குமுறையை யும் எவ்வாறு மேம்படுத்தலாம் என் பது தொடர்பாக தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் பொதுமக்களின் கருத்துகளைத் திரட்ட உள்ளது.