முதியோர் பராமரிப்பிற்கு வழிகாட்டும் புதிய ஆய்வு நூல்

முதியோர் பராமரிப்பிற்கு வழி காட்டும் ஒரு புதிய ஆய்வு நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதியோருக்குப் பராமரிப்புச் சேவையை வழங்குவோர் எதிர் நோக்கக்கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்குரிய தீர்வு களை அந்த நூல் எடுத்துக் கூறு கிறது. இந்த நூலின் இரண்டாவது பகுதி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. 'மூப்படையும் சமூகத்தில் முதி யோர் பராமரிப்பு' என்ற அந்த நூலை இணையத்திலேயே படிக்க லாம். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் மருத்துவ உயிரியல் நியதிநிலையம் அந்த நூலை உருவாக்கி இருக்கிறது.

சமூகத்தில் முதியோரைப் பராமரிப்பதில் பல்வேறு வகை குழு வினரும் எதிர்நோக்கக்கூடிய நியதிகள் தொடர்பான அன்றாட சவால்களில் அந்த நூல் ஒருமித்த கவனம் செலுத்துகிறது. பொது சுகாதார வல்லுநர்களின் கருத்துகள் அதில் உள்ளன. உள் ளூர் சுகாதாரப் பராமரிப்பு, சமூகப் பராமரிப்பு நிபுணர்களின் கருத்து களும் அந்த நூலில் அடங்கி இருக்கின்றன. பொது சுகாதாரத் தகவல்கள் தொடர்பான பின்னணி தகவல் களும் அதில் உள்ளன. மருத்துவ நிபுணர்களுக்கு உரிய போதனை, கற்றல் வழிகாட்டி நெறிமுறைகளும் நூலில் இருக்கின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவ பள்ளி யின் இணைப் பேராசிரியர் ஜாக் லின் சின் இந்த நூலை பிரிட்டனில் இருக்கும் இத்தாக்ஸ் நிலையத் தைச் சேர்ந்த கல்விமான்கள், அமெரிக்காவில் இருக்கும் ஹாஸ் டிங்ஸ் சென்டரின் கல்விமான்கள் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!