2017 வளர்ச்சி 2.5% வரை இருக்கும்

சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டு 2.5% வரை வளரும் என்று பகுப்பாய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள். ஏற் கெனவே அவர்கள் 2.3%தான் பொருளியல் வளர்ச்சி இருக்கும் என்று முன்னுரைத்தனர். சிங்கப் பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட காலாண்டு ஆய்வு முடிவின் மூலம் இது தெரிய வருகிறது. சிங்கப்பூர் பொருளியல் 2018ல் 2.5% வளரும் என்பது அவர் களின் புதிய கணக்கீடாக இருக் கிறது. இந்த வளர்ச்சி 2.4% இருக்கும் என்று ஏற்கெனவே அவர்கள் தெரிவித்து இருந்தனர். சிங்கப்பூர் பொருளியல் அண் மைய காலத்தில் முன்னுரைப்பு களைவிட நல்ல முறையில் வளர்ச்சிகண்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 2.7% ஆக இருந்தது. ஆணையம் நடத்திய ஆய்வில் முதல் காலாண்டு வளர்ச்சி 2.6% தான் இருக்கும் என்று தெரி விக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 2.7% ஆக இருக்கும் என்று தாங்கள் எதிர் பார்ப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய ஆய்வில் கலந்து கொண்ட பகுப்பாய்வாளர் கள் தெரிவிக்கிறார்கள். தயாரிப்புத் துறை நல்ல முறை யில் செயல்படும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இருந்தாலும் கட்டு மானம், நிதி, காப்புறுதி, தங்குமிட வசதி, உணவுச் சேவை ஆகிய துறைகளின் வளர்ச்சி எதிர்பார்க் கப்பட்டதைவிட கொஞ்சம் குறை யும் என்று அவர்கள் கூறுகிறார் கள். அமெரிக்க வட்டி விகிதம் இந்த ஆண்டில் மேலும் ஒரு தடவை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு முடி வில் 1 அமெரிக்க டாலருக்கு S$1.460 என்ற கணக்கில் பரிவர்த் தனை இருக்கும் என்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பலர் இணையப்பக்கம் வழியாக விசா பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர்; சிலர் கட்டணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு விசா கிடைப்பதில்லை. விசாரித்தால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும். சிங்கப்பூரிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன.

15 Oct 2019

விசா எடுக்க வேண்டுமா? ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை அவசியம்

கிட்டத்தட்ட 44,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உரையாடல் குழுவில் செயலிமூலம் ஆபாசப் படங்களும் பெண்களின் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட காணொளிகளும் பகிரப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

15 Oct 2019

செயலிமூலம் ஆபாசத் தகவல்களைப் பகிர்ந்த நால்வரில் இருவர் பதின்ம வயதினர்

சிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம்

15 Oct 2019

இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்