சுடச் சுடச் செய்திகள்

‘குடும்பப் பிரச்சினை எனில் வெளியிட்டிருக்கமாட்டோம்’ - பிரதமர் லீ சியன் லூங் உடன்பிறப்புகள் கருத்து

காலமான தங்களுடைய தந்தையின் வீடு தொடர்பில் தங்கள் சகோதரரான பிரதமர் லீ சியன் லூங்குடன் ஏற்பட்ட பிரச்சினை வெறும் குடும்ப விவகாரமாக இருந்திருக்குமேயானால் அது பற்றிய அறிக்கையை தானும் தன் சகோதரர் லீ சியன் யாங்கும் வெளியிட்டிருக்கமாட்டோம் என்று டாக்டர் லீ வெய் லிங் நேற்று தெரிவித்தார். தாங்கள் இருவரும் புதன் கிழமை வெளியிட்ட ஆறுபக்க அறிக்கையின் முக்கியமான செய்தி, பிரதமர் லீ தங்களுக்கு எதையாவது செய்துவிடுவார் என்ற பயமல்ல என்று டாக்டர் லீ நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மாறாக, எண் 38 ஆக்ஸ்லி ரோடு முகவரியில் உள்ள வீடு தொடர்பில், தன் உடன்பிறப்பு களுக்கு எதிராக தனது அதிகா ரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பிரதமர் திரு லீ, அதைப்போலவே சாதாரண குடிமக்களிடத்திலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார் என்பதை தெரிவிப்பதே அந்த ஆறுபக்க அறிக்கையின் முக்கிய செய்தி என்று டாக்டர் லீ குறிப்பிட்டார். தங்களுடைய வழக்கறிஞர் அந்த அறிக்கையைத் தணிக்கை செய்ததாகவும் அவர் கூறினார்.

தாங்கள் பிரதமர் லீ மீது வைத் திருந்த நம்பிக்கை போய்விட்டது என்று அந்த இரு உடன்பிறப்புகளும் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். அரசாங்க அமைப்பு கள் தங்களுக்கு எதிராக செயல் படக்கூடும் என்று தாங்கள் அஞ்சு வதாகவும் அவர்கள் கூறினர். இதற்கு ஓர் அறிக்கையில் பதிலளித்த பிரதமர் திரு லீ, தன் னுடைய உடன்பிறப்புகள் எழுப்பிய குறைகூறல்களை மறுத்தார். தனிப்பட்ட குடும்ப விவகாரங்களை அவர்கள் பகிரங்கப்படுத்திவிட்டது குறித்து தான் ஏமாற்றம் அடைந்து விட்டதாகவும் கவலை அடைவ தாகவும் திரு லீ குறிப்பிட்டார்.

இதற்கிடையே, டாக்டர் லீ, தான் விடுமுறையில் ஸ்காட்லாந் தில் இருப்பதாக நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். இந்தச் சச்சரவுப் பற்றி ஊடகம் தெரிவித்திருந்த தகவல் பற்றி குறிப்பிட்ட டாக்டர் லீ, சிங்கப்பூர் செய்தித்தாட்களில் வெளியான செய்திகள் பிரதமர் கருத்தை வெளிப்படுத்தின என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon