புதிய தனியார் வீடுகளுக்குத் தேவை 34% குறைந்தது

சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகளுக்கான தேவை ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் குறைந்துவிட்டது. அந்த மாதத்தில் விற்பனைக்கு வந்த வீடுகள் குறைவாக இருந்தன. வீடுகளைக் கட்டி விற்பவர் கள் மே மாதம் 1,024 புதிய வீடு களை விற்றனர். இது ஏப்ரல் மாதத்தில் விற்கப்பட்ட 1,558 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 34% குறைவு என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறி யது. சென்ற ஆண்டு மே மாதம் 1,058 வீடுகள் விற்கப்பட்டன. புறநகர் பகுதிகளில் அமைந் துள்ள புதிய வீடுகளில் மே மாதம் 617 வீடுகள் விற்கப்பட் டன. நகரின் விளிம்புப் பகுதி யில் 341 வீடுகளும் மைய வட்டாரத்தில் 66 வீடுகளும் மே மாதம் கைமாறின.

வெஸ்ட் கோஸ்ட் வேல் பகுதியில் கட்டப்படும் பார்க் ரிவேரா வீடுகள்தான் ஆக அதிக விலைக்கு அதாவது சராசரியாக ஒரு சதுர அடி $1,246 விலைக்கு விற்கப்பட்டன. அங்கு 83 வீடு கள் வாங்கிக்கொள்ளப்பட்டன. கூட்டுரிமை வீடுகளைப் பார்க்கையில் சென்ற மாதம் 370 புதிய வீடுகள் விற்கப்பட் டன. ஏப்ரல் மாதம் விற்கப்பட்ட இத்தகைய வீடுகள் 371. சென்ற மாதம் 339 புதிய வீடுகளே விற் பனைக்கு வந்தன. ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 1,616. கூட்டுரிமை வீடுகள் எதுவும் சென்ற மாதம் விற்பனைக்கு வரவில்லை.