சுடச் சுடச் செய்திகள்

போலிஸ் அதிகாரி உட்பட ஐவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

லஞ்ச ஊழல் தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் களில் ஒரு போலிஸ் அதிகாரியும் முன்னாள் போலிஸ் அதிகாரிகள் இரண்டு பேரும் அடங்குவர். மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் சுக்கோர் வார்ஜி, முன்னாள் மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் டான் பீ சோங், முன்னாள் போலிஸ் இன்ஸ்பெக்டர் லாம் ஜியோ லோங் டெரன்ஸ் ஆகிய மூவரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு அங்கீகரிக்கப் படாத தகவல்களைத் தெரிவித்த தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டானை கைதுசெய்ய சுக்கோர் தவறிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூறுகிறது. டானுக்கு அங்கீகரிக் கப்படாத தகவல்களைக் கொடுத்த தாக அவர் மீதான மற்றொரு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

யீ கோக் சியோங் என்ற தொழிலதிபரிடமிருந்து $4,000 லஞ்சம் பெற டான் ஒப்புக்கொண் டார் என்று அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கூறுகிறது. வேறொருவரைத் தவறான முறையில் கைதுசெய்ய வெகுமதி யாக சுக்கோருக்கு $2,000 கொடுக்க முன்வந்ததாக இந்தத் தொழிலதிபர் மீது குற்றம் சுமத் தப்பட்டு இருக்கிறது. போலிஸ் மேற்கொண்ட ஒரு கைது நடவடிக்கை பற்றிய தக வலை சுக்கோரிடமிருந்து பெற்ற தாவும் அதை தெரியப்படுத்திய தாகவும் டான் மீது குற்றம் சுமத் தப்பட்டது. லிம் சுவா ஹூவாட், 61, என்பவர் குற்றம் சுமத்தப் பட்டுள்ள மற்றொருவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon