சைக்கிள் சக்கரத்தில் கால் சிக்கியதால் துடித்த சிறுவன்

சைக்கிள் சக்கரத்தில் சிறுவனின் கால் சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து தங்களுடைய சைக்கிள்கள் பாதுகாப்பானவை என்று சைக்கிள் நிறுவனமான ‘ஓஃபோ’ உறுதி கூறியுள்ளது. பின்சக்கரத்தில் கால் சிக்கியிருந்த நிலையில் வலியால் துடித்த சிறுவனின் காணொளி படம் பேஸ்புக்கில் பதி வேற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஊடகப் பதிவாளர்கள் பலர் சைக்கிள் பாதுகாப்பற்றது என்று குறைகூறினர். இது குறித்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த ‘ஓஃபோ’ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், பதினெட்டு வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு மட்டுமே சைக்கிள் வழங்குவதை உறுதி செய்கிறோம் என்றார். சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதற்குள் வழிப்போக்கர் ஒருவர் உதவியால் சிறுவன் தனது காலை எடுத்துவிட்டதாகவும் அவனுக்கு சிறிய சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் பேச்சாளர் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

உரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Dec 2019

பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது.

07 Dec 2019

ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்