சுடச் சுடச் செய்திகள்

கூண்டில் இறந்துகிடந்த நீர்நாய்; பொறி வைத்தவர் பிடிபட்டார்

மரினா புரோமனாட்டில் வைக்கப் பட்ட பொறியில் சிக்கி ஒரு நீர் நாய் இறந்துவிட்டது. இதையடுத்து நீர்நாய்க்கு பொறி வைத்த ஆடவரும் கையும் களவுமாகப் பிடிபட்டார் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. கழகத்தின் துப்புரவு ஒப்பந்த தாரர் மெரினா புரோமனாட்டில் உள்ள காலாங் பேசின் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் நீர்நாய் சிக்கி இறந்து கிடந்ததை புதன் கிழமை காலை 11.40 மணியளவில் பார்த்துள்ளார். அதே நாள் மாலை 5.30 மணியளவில் மரினா புரோமெனட் வட் டார நீர்த்தேக்கத்தில் பொறிகளை வைத்துக்கொண்டிருந்த ஆடவரை அங்கிருந்த அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து பொதுப் பய னீட்டு (நீர்த்தேக்கங்கள், நீர் பிடிப்பு, நீர்நிலை) சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கழகம் அறிவித்தது. இதற்கிடையே இறந்த நீர்நாய், நீர்நாய் கண்காணிப்புப் பணிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் பிரேதப் பரிசோதனைக் காக அது சிங்கப்பூர் வன விலங்குகள் காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டது. இதற்கிடையே இறந்த நீர்நாய் பீஷானில் உள்ள நீர்நாய் குடும் பத்தைச் சேர்ந்தது என்று நீர்நாய் கண்காணிப்பு குழு ஒன்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. இரண்டு நாட்களாக பீஷான் நீர்நாய் குடும்பத்திலிருந்து ஒரு நீர்நாய் காணவில்லை என்றும் அந்த குழு கூறியது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நீர்த்தேக்கங்களில் விலங்குகளைப் பொறி வைத்துப் பிடிப்பதோ அவற் றைத் துன்புறுத்துவதோ சட்டப்படி குற்றம் என்று கழகம் பொது மக்களுக்கு நினைவூட்டியது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் 1800-2255-782 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ள லாம் என்றும் புகாருடன் நாள், நேரம், இடம், புகைப்படம் அல்லது வீடியோ படத்துடன் அனுப்பினால் உதவியாக இருக்கும் என்று கழகம் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon