சுடச் சுடச் செய்திகள்

மாடியிலிருந்து சைக்கிளை வீசிய சிறுவன் கைது

வாம்போவில் உள்ள வீவக புளோக் மாடியிலிருந்து சைக்கிளை வீசி எறிந்து கண்மூடித்தனமாக செயல் பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை அன்று ஜாலான் தென்தராமில் உள்ள புளோக் 116பி-யிலிருந்து அவன் சைக்கிளை தூக்கி வீசினான் என்றும் பின்னர் கண்மூடித்தன மான செயல்களில் அவன் ஈடு பட்டான் என்றும் காவல்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பல புகார்கள் வந்துள்ளதாகவும் காவல்துறை யினர் கூறினர். சம்பவம் நடைபெற்ற அதே நாளில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். ஆபத்தான செயல்களில் ஈடு பட்டது நிரூபிக்கப்பட்டால் சந் தேக நபருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ அல் லது 2,500 வெள்ளி வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதற்கிடையே மற்றவர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon