சட்டத்தை மீறும் கனரக வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

போக்குவரத்துக்கு விதிமுறை- களை மீறும் கனரக வாகன ஓட்டுநர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலிசார் ஒரு மாத காலத்துக்கு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள- உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த மாதத்தில் கனரக வாகனங்கள் தொடர்பான வாகன விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இந்த நடவடிக்கையைப் போக்குவரத்து போலிசார் மேற்கொள்கின்றனர். வெளிப்படையான, மறைவான நடவடிக்கைகள் அன்றாடம் மேற்- கொள்ளப்படும். இவற்றில் சில நிலப்போக்குவரத்து ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகிய- வற்றின் ஆதரவுடன் இடம்பெறும். கனரக வாகனங்கள் போக்கு- வரத்து விதிகளை மீறிய சம்பவங் கள் கடந்த ஆண்டில் 13 விழுக் காடு உயர்ந்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டின.

2015ல் கனரக வாக னங்களின் போக்குவரத்து விதி மீறல் சம் பவங்களின் எண்ணிக்கை 16,413. இது 2106ல் 18,591 ஆக உயர்ந் துள்ளது என்று போக்குவரத்து ஆணையம் நேற்று நடந்த செய்தி யாளர் கூட்டத்தில் தெரிவித்தது. கனரக வாகன ஓட்டுநர்களின் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றங்களில், வேகக் கட்டுப் பாட்டை மீறிய வேகம், விரைவுச் சாலையில் இடது தடத்தில் செல்லத் தவறுவது, வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி யில் பேசுவது ஆகிய மூன்றும் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கனரக வாகனம் தொடர்பான விபத்துகளில் மரணங்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளன. இந்த ஆண்டில் கனரக வாகனம் தொடர்பான விபத்துகளில் 19 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ஏற்பட்ட 16 மரணங் களைவிட இது அதிகம். 2016ல் நடந்த மரணத்தை ஏற்படுத்தும் சாலை விபத்துகளில் பத்தில் மூன்று விபத்துகள், 2,500 கிலோ கிராமுக்கும் அதிகமான கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்டவை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பலர் இணையப்பக்கம் வழியாக விசா பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர்; சிலர் கட்டணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு விசா கிடைப்பதில்லை. விசாரித்தால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும். சிங்கப்பூரிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன.

15 Oct 2019

விசா எடுக்க வேண்டுமா? ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை அவசியம்

கிட்டத்தட்ட 44,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உரையாடல் குழுவில் செயலிமூலம் ஆபாசப் படங்களும் பெண்களின் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட காணொளிகளும் பகிரப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

15 Oct 2019

செயலிமூலம் ஆபாசத் தகவல்களைப் பகிர்ந்த நால்வரில் இருவர் பதின்ம வயதினர்

சிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம்

15 Oct 2019

இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்