சுடச் சுடச் செய்திகள்

தேசிய சேவையாளர்களைப் போற்ற ‘பாராட்டு வணக்கம்’

சிங்கப்பூரில் தேசிய சேவையின் 50வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ‘நம் தேசிய சேவையாளர் களுக்குப் பாராட்டு வணக்கம்’ என்ற ஓர் இயக்கத்தை சாஃப்ரா தொடங்கி இருக்கிறது. தேசிய சேவையாளர்களுக்குச் சமூகத்தினர் செலுத்தும் 50,000 பாராட்டு வணக்கங்களைச் சேக ரிப்பதே இயக்கத்தின் இலக்கு. தற்போதைய அல்லது கடந்த கால தேசிய சேவையாளர்களைப் பாராட்டி எழுதி, புகைப்படங்களை, காணொளிகளை ஃபேஸ்புக்கிலும் ‘இன்ஸ்டாகிராம்’ தளத்திலும் பதி வேற்றி அனுப்பும்படி அந்த இயக் கம் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

அந்தப் பதிவேற்றங்கள் #NS50salute மற்றும் #safrasg என்ற அடையாளங்களுடன் இருக்கவேண்டும். சிங்கப்பூர் முழு வதும் உள்ள குறிப்பிட்ட கடைத் தொகுதிகளிலும் பேருந்து நிறுத் தங்களிலும் உள்ள இருவழி மின் னிலக்க புகைப்படக் கூடங்களி லிருந்தும் பொதுமக்கள் தங்கள் பாராட்டு வணக்கங்களை அனுப்பி வைக்கலாம்.

அவர்கள் சாஃப்ரா மனமகிழ் மன்றங்களில் இருந்தும் சாஃப்ரா என்எஸ்50 நினைவு நிகழ்ச்சிகளின் போதும் அத்தகைய வணக்கங் களை அக்டோபர் மாதம் வரை அனுப்பலாம். சாஃப்ராவின் துணைத் தலைவரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான மாலிக்கி ஒஸ்மான், சாஃப்ரா ஜூரோங் மனமகிழ் மன்றத்தில் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

சாஃப்ரா துணைத் தலைவரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான டாக்டர் மாலிக்கி ஒஸ்மானுடன் பலரும் தேசிய சேவை யாளர்களுக்கு சாஃப்ரா ஜூரோங் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பாராட்டு வணக்கம் செலுத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon