சுடச் சுடச் செய்திகள்

ஃபேஸ்புக் சமூக ஊடகம் வழி உதவும் தொண்டூழிய அமைப்பு

வில்சன் சைலஸ்

அண்மையில் பிறந்த இரண்டாவது பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்குவது 22 வயது திருமதி லட்சுமிக்குப் பெருஞ்சவால். கணவர் தேசிய சேவையாற்ற, இரண்டு வயது மகனையும் பார்த்துக்கொண்டு வேலைசெய்ய சிரமப்படும் இவருக் குக் கைகொடுத்து உதவி வரு கிறது ஃபேஸ்புக்கில் தொடங்கப் பட்ட ஒரு தொண்டூழியக் குழு. வசதி குறைந்த குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பல மாதங்களாகப் பூர்த்திசெய்து வரும் ‘பிளசிங் ஐட்டம் ஃபார் இந் தியன் ஃபேமிலிஸ்’ எனும் ஃபேஸ் புக் குழு, ஆறு வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக் காகக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்தது.

தாம்சன் சமூக மன்ற மலாய் நற்பணிச் செயற்குழுவின் ஆதர வுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றவர்களுள் திருமதி லட்சுமி மாணிக்கமும் ஒருவர். “இதுபோன்ற நிகழ்ச்சி குடும்பப் பிணைப்பை வலுப்படுத்து கிறது. தந்தையர் தினம் என்பதா லும் இதர நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்ததில் திருப்தி,” என்றார் லட்சுமி. இதனிடையே, இந்தக் குழு தாம்சன் சமூக மன்றத்தில் நடத் திய கொண்டாட்டத்தில் ஐம்பதுக் கும் மேற்பட்ட பிள்ளைகள் பெற் றோருடன் ஒன்றுகூடினர்.

வசதி குறைந்த பின்னணியைச் சேர்ந்த சுமார் 50 பிள்ளைகள் தாம்சன் சமூக மன்றத்தில் தங்கள் ஞாயிறு பொழுதைப் புதிய நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் ஒன்றுகூடி களித்தனர். தந்தையர் தினம் என்பதாலும் நிகழ்ச்சி மேலும் களை கட்டியது. படம்: பிளஸ்பாய்ண்ட் நடனக் குழு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon