வாடகை சைக்கிள்களை கண்டபடி நிறுத்திவைக்கும் பிரச்சினை

வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்தும் பலரும் சைக்கிள்களைப் பயன்படுத்திவிட்டு அவற்றைக் கண்டபடி நிறுத்திவிட்டுப் போய்விடுவதால் பலருக்கும் சங்கடங்கள் ஏற்படுகின்றன. இப்படி பயன்படுத்தும் சைக்கிள்கள் வீவக புளோக்கிலிருந்து கீழே போடப்பட்டு இருக்கிறது. கால்வாய்களில் கூட சைக்கிள்கள் கிடக்கின்றன. நிலப்போக்குவரத்து ஆணையம் சென்ற மாதம் முதல் கண்டபடி நிறுத்திவைக்கப்பட்ட சுமார் 600 சைக்கிள்களை அப்புறப்படுத்தும்படி கடிதங்களைப் பிறப்பித்தது. குறித்த நேரத்திற்குள் அகற்றப்படாமல் இருந்த 135 சைக்கிள்களை அதிகாரிகள் முடக்கிவிட்டனர். சிங்கப்பூரில் ஓஃபோ, ஓபைக், மொபைக் ஆகிய வாடகை சைக்கிள் நிறுவனங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் முடக்கிய சைக்கிள்கள் இந்த மூன்று நிறுவனங்களையும் சேர்ந்தவை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.