சிங்கப்பூர் கடலோரம் மேல்நோக்கி எழுந்த நீர்ச்சுழல்

காற்றின் சுழற்சியால் உருவான பெரியதொரு நீர்ச்சுழல் நேற்றுக் காலை சிங்கப்பூரின் கடற்கரையில் தென்பட் டதை பலரும் கண்டு வியந்தனர். காலையில் இடியுடன் மழை தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அந்த நீர்ச்சுழல் கடலில் இருந்து எழுந்ததாக கிரண் கிரேவல் என்னும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர் குறிப்பிட்டார். படத்தையும் அவர் அனுப்பி வைத்தார். பாத்தாம் கடலோரப் பகுதியிலிருந்து தென்பட்ட அந்த நீர்ச்சுழல் புகைபோக்கி போல காணப்பட்டதாக அவர் சொன்னார். ஆங்கர்வேல் ரோட்டில் இருந்து மற்றொரு வாசகரும் படம் பிடித்து அனுப்பி இருந்தார். நீர்ச்சுழல் சிங்கப்பூரின் கடல் நீர் பகுதியில் அரிதாகத் தோன்றும் ஒன்று என்றும் மிகக் குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கக் கூடியது அது என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரி வித்தது. காற்றின் சுழற்சியால் புகைபோக்கி போன்ற நீர்ச்சுழல் மேல்நோக்கி எழுவதாக அது குறிப்பிடுகிறது. ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர் கிரண் கிரேவல் அனுப்பிய படம்.