சிரமங்களை எதிர்கொள்ளும் கட்டுமானத் தொழில்துறை

சிங்கப்பூரின் கட்டுமானத் தொழில்துறை கடுமையான காலகட்டத்தை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது. புதிய தொழில்நுட்பத்தைத் தழுவ வேண்டிய நெருக்குதல்கள், குறைவான ஒப்பந்தங்கள், வெளிநாடுகளிலிருந்து கடும் போட்டி ஆகிய பல சவால்களை இந்தத் தொழில்துறை எதிர்நோக்குகிறது. குத்தகை விலைகள் பாதாளத்துக்கு இறங்கிவிட்டன.

முன்வார்ப்பு தொழில்நுட்பங்களை நாடும்படியும் ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கை குறைத்துக் கொள்ளுமாறும் கட்டட, கட்டுமான ஆணையம் நிறுவனங்களை வலியுறுத்தி வருவதுடன், இதைச் சாதிக்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை அண்மைய ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தி உள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுவாக்கில் இந்தத் துறையில் வெளிநாட்டு ஆள்பலத்தை மேலும் குறைப்பது நோக்கம் என்று இந்த ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஜான் கியுங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் சுமார் 8,000 சிறிய, நடுத்தர குத்தகைதாரர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. நிலவரங்கள் சரியில்லை. சந்தைச் சூழல் சவால்மிக்கதாக உள்ளது. ஆகையால் தொழிலை தொடர்ந்து நடத்துவது லாபகரமானதாக இருக்காது என்று நிறுவனங்கள் நினைக்கக்கூடும் என சிங்கப்பூர் குத்தகைகாரர்கள் சங்கத் தலைவர் கென்னத் லூ தெரிவித்தார். செலவுதான் ஆகப் பெரிய சவால் என்று தொழில்துறையினர் கூறுகிறார்கள்.

கட்டுமானத் தொழில்துறை பல சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோப்புப் படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆபாசப் படங்களை விநியோகித்துக்கொண்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மின்னியல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

19 Oct 2019

எஸ்ஜி நாசி லெமாக்: இருவர் மீது புதிய குற்றச்சாட்டு