சுடச் சுடச் செய்திகள்

பொய்ச் செய்தி தடுப்புச் சட்டம் 2018ல் நடைமுறைக்கு வரலாம்

பொய்ச் செய்திகளைச் சமாளிப் பதற்கான ஒரு புதிய சட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் முற்றிலும் நம்பிக்கை மிக்க ஒரு சூழலைக் கட்டிக் காக்க வேண்டும் என்றும் இணை யத்தில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் ஆற்றலு டன் அரசாங்கம் திகழவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இப்போதைய சவால்களைச் சமாளிக்கும் அதிகாரம் அதிகாரிக ளிடம் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட திரு சண்முகம், இதில் சமூகத்திற்கும் ஊடகத்திற்கும் இணைய நிறுவனங்களுக்கும் பங்கு இருக்கிறது என்றார்.

பொய்ச் செய்திகள் பரவும் பிரச்சினையை விவாதிப்பதற்கான ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் அமைச்சர் சண்முகம் முக்கிய உரையாற்றினார். பொய்ச் செய்திகளை முறி யடிக்க பரிசீலிக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றி அப்போது அவர் குறிப்பிட்டார். ‘உள்ளது உள்ளபடி இருக்கட் டும்: ஊடகத்தில் உண்மையும் நம்பிக்கையும்’ என்ற தலைப்பிலான அந்த மாநாட்டிற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளும் உலக செய்தித்தாள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கமும் ஏற்பாடு செய்துள்ளன. பொய்ச் செய்திகளைத் தடுப் பதற்கான சட்டம் தொடர்பில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அரசாங்கம் இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பொய்ச் செய்திகள் இடம்பெறக்கூடாது. அப்படி இடம்பெற்றால் உண்மையை நிலைநாட்டிவிட வேண்டும். இதனை உறுதிப்படுத்த வலுவான சட்டங்கள் தேவை என்று 91% சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்கள் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்து இருக்கிறது. தவறான செய்தி என்பது முன்பைவிட இப்போது கடுமை யானதாக ஆகியிருக்கிறது. குறிப் பிட்ட நோக்கங்களை, குறிக்கோள் களை எளிதாக, செம்மையாக நிறைவேற்றும் வழியாக தவறான செய்திகள் பயன்படுத்தப்படு கின்றன என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். உண்மை கட்டிக்காக்கப்படும் ஒரு கலாசாரத்தைப் பேணி வளர்க்க பொதுமக்களும் குடிமைச் சமூகமும் உதவவேண்டி இருப்ப தாக அமைச்சர் கூறினார். ஊடக அறிவு இதன் காரண மாகவே மிகவும் முக்கியமானதாக ஆகியிருக்கிறது என்ற அவர், இந்த அறிவு இருந்தால் மக்கள் போலியான செய்திகளை எளிதில் கண்டுபிடித்து அவற்றைச் சமாளித்துவிட முடியும் என்று தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon