தோ பாயோ புளோக் வெற்றுத் தளத்தில் தீ; ஒருவர் காயம், 50 பேர் வெளியேற்றம்

தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) புளோக் ஒன்றின் வெற்றுத் தளத்தில் நேற்று அதி­காலை தீ மூண்டதில் சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்­பட்டனர். இதில் காயமடைந்த 60 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்­குக் கொண்டுசெல்லப்பட்டார். புளோக் 14ஏ லோரோங் 7 தோ பாயோவில் நிகழ்ந்த இந்தச் தீச் சம்பவத்தில் வீசப்பட்ட பொருட்கள் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்­கப்பட்டது. இதனால் எரிவாயு குழாய் ஒன்று சேதமடைந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தீயணைப்புச் சாதனங்களைக் கொண்டு தீயை அணைத்ததாக அப்படையின் பேச்­சாளர் ஒருவர் தெரிவித்தார். அந்த புளோக்கில் இரண்டாவது மாடி­ யி­லிருந்து ஆறாவது மாடி வரை வசிக்கும் சுமார் 50 குடியிருப் பாளர்­­கள் போலிசாரால் வெளியேற் றப்பட்­­டனர். சம்பவம் குறித்து அதிகாலை 4.51 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்ட தாக தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இரு தீயணைப்பு வாகனங்­களையும் இரு அவசர மருத்துவ வாகனங் களையும் அனுப்பி வைத்­ தது.

இந்தத் தீச் சம்பவத்தினால் அந்த புளோக்கின் வெற்றுத் தளத்­தின் மேற்கூரை சேதமடைந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நேற்றுக் காலை 10.30 மணிக்கு அந்த புளோக்கிற்கு சென்று பார்த்தபோது எரிவாயுக் குழாய் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்­ளப்படுவதாக அறிவிப்புப் பலகை­ கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த நாளிதழிடம் பேசிய குடியிருப்பாளர்­கள் அந்த புளோக் முழுதும் மின்­ தடை, எரிவாயுத் தடை ஏற்பட்ட­தாகக் கூறினர். நேற்று மாலை 6 மணிக்கு மின்சார, எரிவாயு வசதி கள் வழக்கநிலைக்குத் திரும்பும் என பீஷான்தோ - பாயோ நகர மன்றம் கூறியது.

தீயினால் புளோக் வெற்றுத் தளத்தின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சோதிக்கும் ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!