உடல், தலை வலியினால் நாட்டிற்கு $8.4 பி. இழப்பு

உடல் அல்லது தலை வலியினால் பாதிக்கப்படுவோரால் சிங்கப்பூர் பொருளியலுக்கு ஒவ்வோர் ஆண்டும் $8.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்­துள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஊழியர்கள் உடல் வலி காரண­மாக சராசரியாக மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தனர். வலியைப் பொறுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றவர்களுக்கு உற்பத்தித்திறன் 15 விழுக்காடு குறைந்தது. இருப்பினும், வலி நிவாரணத்திற்கு ஏராளமானோர் உதவி நாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களில் பாதிக்கும் மேற்­பட்டோர் வலியைப் பற்றி குடும்­பத்தினரிடமோ அன்புக்­குரிய­வர்களிடமோ சொல்லாமல் அவதியுறுவதாக ஆய்வின் முடி­வு­கள் குறிப்பிட்டன. மூன்று பேரில் ஒருவர் வலியைப் பொருட்­ படுத்துவதில்லை. 32 நாடுகளில் 19,000 பெரிய­வர்கள் ‘2017 ஜிஎஸ்கே குளோ­பல் பெய்ன் இன்டெக்ஸ்’ எனப்­படும் இந்த ஆய்வில் பங்கேற்­றனர். உலகம் முழுதும் 85 விழுக் காட்டினர் தலை, உடல் வலியால் அவதியுறுகின்றனர். சிங்கப்பூரிலும் இதே விழுக்காட்­டினர் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரி­விக்­கப்பட்டது.