சுடச் சுடச் செய்திகள்

கிரேஸ் ஃபூ: பயமும் பகையும் ஏற்பட அனுமதிக்கக்கூடாது

தீவிரவாதச் சிந்தனைகளை எதிர்ப் பதற்கு முஸ்லிம் சமூகம் பெரு முயற்சி செய்து வருகிறது. இந் நிலையில், தீவிரவாதச் சிந்தனை களை வளர்த்துக்கொண்ட தனி மனிதர்கள் சிலர் அண்மையில் கைதான சம்பவத்தால் சமுதாயத் தில் பிரிவினை ஏற்படுவதை சிங் கப்பூரர்கள் அனுமதிக்கக் கூடாது என கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று கூறினார். “சமூகத்தின் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதில் நம் அனைவருக் கும் பங்குண்டு. முக்கியமாக, இந் தச் சம்பவங்களால் நமக்கிடையில் பிரிவினை ஏற்படுவதை, அல்லது நமது பல இன, பல சமய சமுதா யத்தில் பகையுணர்வும் பயமும் எழுவதை நாம் அனுமதிக்கக் கூடாது,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கருத்துரைத்தார்.

சிங்கப்பூரர்களான இரு துணை போலிஸ் அதிகாரிகள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவித்த மறுநாள் திருவாட்டி ஃபூ தமது கருத்தை வெளியிட்டார். இந்தச் சட்டத்தின் கீழ் சீருடை அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என நம்பப் படுகிறது. கடந்த மாதம் கைதான இரு ஆடவர்களும் உட்லண்ட்ஸ் சோத னைச்சாவடியில் ஏட்டோஸ் அதி காரி ளாகப் பணியாற்றினர். வட லண்டனில் பள்ளிவாசல் தாக்கப் பட்ட ஒரு நாளுக்குப் பிறகு கைது செய்தி வெளியிடப்பட்டது. கைது செய்தி வெளிவந்தவுடன், இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தவிர்த்து, சிங்கப்பூரர்கள் அனைவ ரும் ஒற்றுமையாக இருக்கவேண் கிரேஸ் ஃபூ: பயமும் பகையும் ஏற்பட அனுமதிக்கக்கூடாது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் துணை போலிஸ் அதிகாரிகள் கைதான சம்பவம் டும் என அரசியல் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்