செய்தியாளர் போல வேடமிட்டு பணம் பறித்த ஆடவர்

‘‌ஷின் மின்’ சீன நாளிதழைச் சேர்ந்த செய்தியாளர் என பொய் வேடமிட்டு பெக் கியோ உணவு அங்காடியில் உள்ள உணவு கடைக்காரர் ஒருவரிடம் $500 பணம் பறித்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து ‘‌ஷின் மின்’ சீன நாளிதழும் சம்பந்தப்பட்ட உணவுக் கடை உரிமையாளரும் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். கேம்ப்ரிட்ஜ் சாலையில் உள்ள பெக் கியோ உணவு அங்காடியில் இம்மாதம் 19ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது சீன ஆடவர் ஒருவர் தாம் ‌ஷின் மின் நாளிதழின் செய்தியாளர் எனக் கூறிக் கொண்டு அக்கடைக்காரரிடம் விளம்பரங்கள் விற்க முயன்றுள்ளார் என கடை உரிமையாளர்களில் ஒருவரான 55 வயது திருவாட்டி சென் ‌ஷின் மின் நாளிதழிடம் கூறியுள்ளார். அந்த ஆடவர் தாம் அடிக்கடி தொலைக்காட்சியில் வரும் உணவு நிகழ்ச்சிகளில் வரும் பிரபலம் என்று கூறியுள்ளார். ஆதாரம் கேட்டதற்கு பதிலளிக்காமல் மழுப்பிவிட்டு கடைக்காரர்களை பேட்டி எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வர்த்தகர் மாநாட்டில் முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமுடன் கைகுலுக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

‘சமூக ஒற்றுமைக்கு வர்த்தக தலைவர்கள் பங்காற்றலாம்’

நெக்ஸில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியில் புகைமூட்டத்தை சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களுடன் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. படம்: த நியூ பேப்பர்

21 Sep 2019

புகைமூட்டம்; காற்றாய் பறக்கும் சாதனங்கள்

அங் மோ கியோவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியில் அங்கு வந்திருந்த வர்களைச் சந்தித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

வேலை வாய்ப்பு கண்காட்சி; 100,000 பேரை எட்ட முயற்சி