துவாஸ் தொழிற்சாலையில் தீ, இருவர் மருத்துவமனையில்

துவாஸ் தொழிற்சாலை ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து இருவர் தீக்காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் 28, துவாஸ் அவென்யூ 10ல் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் இணையப் பக்கத்தில் நேற்று மாலை 5.45 மணியளவில் செய்தி வெளியிடப்படது. நான்கு நீர் பீய்ச்சியடிக்கும் கருவிகள், ஒரு ஆளில்லா தீயணைப்பு இயந்திரம், வானிலிருந்து நீர் பாய்ச்சும் மேடை ஆகியவற்றுடன் தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடிக் கொண்டிருந்ததாக அந்த ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது.

தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் தீப்பற்றிக் கொண்டது என்றும் ஆனால் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ கட்டுக்குள் உள்ளது என்றும் மாலை 6.24 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது. தீக்காயங்களுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு இருவர் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர்கள் தொழிற்சாலை யில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் என்றும் அறியப் படுகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய படங்களில், பெரும் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவர முயல்வதையும் சுற்றுவட்டாரத்தில் நிறைய கரும்புகை எழுவதையும் காண முடிந்தது.

தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் வீரர்கள். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பலர் இணையப்பக்கம் வழியாக விசா பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர்; சிலர் கட்டணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு விசா கிடைப்பதில்லை. விசாரித்தால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும். சிங்கப்பூரிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன.

15 Oct 2019

விசா எடுக்க வேண்டுமா? ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை அவசியம்

கிட்டத்தட்ட 44,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உரையாடல் குழுவில் செயலிமூலம் ஆபாசப் படங்களும் பெண்களின் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட காணொளிகளும் பகிரப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

15 Oct 2019

செயலிமூலம் ஆபாசத் தகவல்களைப் பகிர்ந்த நால்வரில் இருவர் பதின்ம வயதினர்

சிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம்

15 Oct 2019

இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்