சுடச் சுடச் செய்திகள்

மின்னிலக்க யுகத்தில் நூலகத்தின் முக்கியம்

மின்னிலக்க யுகத்தில் புத்தகங்களை வாசிக்க மக்களுக்கு உதவக்கூடிய வகையில் நூலகங்களும் மின்னிலக்கமயமாகின்றன. வாசகர்கள் புத்தகங்களையும் செய்தித்தாட்களையும் சஞ்சிகைகளையும் கையடக்கச் சாதனங்களில் எங்குவேண்டு மானாலும் படிக்கக்கூடிய வாய்ப்பு இப்போது இருக்கிறது. இதற்கு வசதியாக தேசிய நூலக வாரியம் இரண்டு இலவச செயலிகள் மூலம் மின்னிலக்க புத்தக வசதிகளை வழங்குகிறது. ‘என்எல்பி மொபைல் அப்’ என்ற ஒரு செயலியைப் பயன்படுத்தி வாசகர்கள் புத்தகங்களைக் கடன் வாங்கலாம். நூலக திட்டங்களில் பதியலாம். கட்டணத்தைக்கூட செலுத்தலாம். ‘பிரஸ்ரீடர் அப்’ என்ற செயலி மூலம் வாசகர்கள் உலகம் முழுவதையும் சேர்ந்த 6,000க்கும் அதிக செய்தித்தாட்களையும் சஞ்சிகைகளையும் படிக்கலாம். செங்காங், புக்கிட் பாஞ்சாங் பொது நூலகங்கள் மின்னிலக்க புத்தகங்களையும் காகிதப் புத்தகங்களையும் காட்சிக்கு ஒன்றாக வைத்து உள்ளதை மின்னிலக்க செயலிகள் மூலம் காணலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon