சுடச் சுடச் செய்திகள்

பிரச்சினைகள் இருந்தாலும் இன்னமும் மாதச் சம்பள முறை

பிரச்சினைகள் பல இருந்தாலும் ஹெச்டிடி நிறுவனம் தொடர்ந்து டாக்சி ஓட்டிகளுக்கு நிலையான சம்பளத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. சில டாக்சி ஓட்டிகள் வசூலான தொகையுடன் ஓடி விட்டார்கள். சிலர் சரியாகச் செயல்படுவதில்லை. சிலர் தில்லு முல்லு செய்கிறார்கள். இருந்தாலும் கூட இந்த நிறுவனம் டாக்சி ஓட்டிகளுக்கு மாதாந்திர சம்பளத் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தி வரு கிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் டாக்சி ஓட்டு நர்களுக்கு மாதச் சம்பளம் தரும் ஒரே நிறுவனம் ஹெச்டிடி சிங்கப் பூர் டாக்சி நிறுவனம்தான்.

சிங்கப்பூரில் 26,000க்கும் அதிக டாக்சிகள் ஓடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஐந்து டாக்சி நிறுவனங்கள் டாக்சி ஓட்டிகளுக்கு வாடகைக்கு விடுகின்றன. அவர்கள் அன்றா டம் $130 வரை வாடகை தரு கிறார்கள். ஹெச்டிடி நிறுவனம் மின்சாரத்தில் ஓடும் 80 டாக்சி களை நிர்வகித்து நடத்துகிறது. இது தன்னுடைய டாக்சி ஓட்டுநர்களுக்கு $1,900 மாதச் சம்பளம் வழங்குகிறது. இதில் மசே நிதி சந்தாத் தொகையும் அடங்கும். குறைந்த பட்சம் $7,250 டாக்சி வருவாய் இலக்கை எட்டும் பட்சத்தில் டாக்சி ஓட்டுநர்களுக்கு $3,200 மாதச் சம்பளம் கிடைக்கும். எங்களிடம் வேலை பார்த்தால் அடிப்படை சம்பளம் நிச்சயம் உண்டு என்று இந்த நிறுவனம் கூறுகிறது. ஐந்து டாக்சி ஓட்டி கள் வசூலான பணத்தை எடுத் துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon