தேசிய நாள் அணிவகுப்பு: அமைச்சர் கலந்துரையாடல்

தேசிய நாள் அணிவகுப்பு 2017ன் முதலாவது முழு ஒத்திகை சனிக்கிழமை மரினா பே மிதவை மேடையில் நடந்தது. அந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட சிலரிடம் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் முகம்மது மாலிக்கி ஓஸ்மான் பேசினார். கடந்த இரண்டு மாத காலமாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ள அவர்களுக்கு அமைச் சர் நன்றி கூறினார். இந்த ஆண்டு தேசிய நாள் அணி வகுப்பு நல்ல காட்சியாக அமையும் என்றும் அதைக் காண தான் ஆவலாக இருப்பதாகவும் டாக்டர் மாலிக்கி குறிப்பிட்டார். “அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பலரும் மிகவும் ஊக்கத்துடன் இருக்கிறார்கள். நல்ல திறமைகளை அரங்கேற்ற அவர்கள் தயாராக இருக்கிறார் கள். அவர்களில் ஒவ்வொருவரும் செய்யும் தியாகத்தைப் போற்றிப் பாராட்டுவதற்காக நான் இன்று இவர்களைச் சந்தித்தேன்,” என்று அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறினார்.