சுடச் சுடச் செய்திகள்

போதைப்புழங்கிகள் எண்ணிக்கை சிங்கப்பூரில் கூடிவருகிறது

சிங்கப்பூரில் சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்ட போதைப் புழங்கிகளின் எண்ணிக்கை பல ஆண்டு காலமாகவே அதிகரித்து வந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2012ல் 49 பேராக இருந்தது. சென்ற ஆண்டு 81 பேர் கைது செய்யப்பட்டனர். சாங்கி விமான நிலையம், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி போன்ற நாட்டு நுழைவாயில்களில் 2013ல் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின்போது போதைப்புழங்கிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 47 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை 2012ல் சற்று அதிகமாக 49 ஆக இருந்தது. இருந்தாலும் போதைப்புழங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. பாலி, தாய்லாந்து, ஐரோப்பா போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய இளையர்கள் பலரும் போதைப்பொருள் சோதனையில் சிக்கி இருக் கிறார்கள் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு போதைப்பொருளைப் புழங்கிவிட்டு சிங்கப்பூர் வந்தால் சோதனையில் தப்பி விடலாம் என்றும் நீதிமன்ற நடவடிக்கைள் தங்கள் மீது பாயாது என்றும் சில சிங்கப்பூரர்கள் கருதுகிறார்கள். இது தவறு என்று பேச்சாளர் ஒருவர் எச்சரித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon