சுடச் சுடச் செய்திகள்

6 வீவக கடைத்தொகுதிகளில் $48 மி. மேம்பாடு, வசதிகள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஆறு கடைத்தொகுதிகள் $48 மில்லியன் செலவில் புதுப்பிக்கப் பட்டு இருக்கின்றன. சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகை யில் அந்தக் கடைத்தொகுதி களில் துடிப்புமிக்க பல புதிய அம்சங்கள், வசதிகள் ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றன. வீவக, 1990களின் தொடக்கத் தில் இருந்து கடைத்தொகுதிகளை கட்டிவருகிறது. அவை தீவு முழு வதும் பரவலாக அமைந்திருக்கின்றன.

மொத்தமுள்ள 21 வீவக கடைத்தொகுதிகளில் 927 கடை கள் இருக்கின்றன. மேம்பாட்டுப் பணிகளை அடுத்து ஆறு கடைத்தொகுதி களில் கூடுதலான பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடைத்தொகுதிகளில் நடமாட்ட வசதிகளும் மேம்பட்டுள்ளன. மக்களுக்கு அதிக கடை வசதி யும் சாப்பாட்டு வசதியும் அங்கு இப்போது கிடைக்கின்றன. கடைக் காரர்களுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும் வகையில் புதிய மேம்பாடு கள் உதவுகின்றன. ஆகக் கடைசியாக பாசிர் ரிஸ் சில் இருக்கும் லோயாங் பாயிண்ட் கடைத் தொகுதி மேம்படுத் தப்பட்டு இருக்கிறது. இந்தப் பணி இரண்டு ஆண்டுகள் கட்டம் கட்ட மாக நடந்து சென்ற ஆண்டு டிசம் பரில் முடிவடைந்தது.

லோயாங் பாயிண்ட் கடைத்தொகுதியில் புதிதாக இரண்டு மின்படிக்கட்டுகளும் இரண்டு மின்தூக்கிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon