சுடச் சுடச் செய்திகள்

உயிரைக் காத்த அதிகாரிக்குப் பாராட்டு

சோமர்செட் எம்ஆர்டி நிலையத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உடல் அசைவில்லாமல் இருந்த ஒரு குழந்தைக்கு உதவி, அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றிய சிங்கப்பூர் ஆயுதப்படை மருத்துவ அதிகாரி ஒருவருக்குப் பாராட்டு கடிதம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுவா செங் யான் என்ற அந்த அதிகாரி, பிப்ரவரி 13ஆம் தேதி ரயிலில் ஏறிச் செல்லவிருந்த நேரத்தில் மருத்துவ உதவி தேவை என்று பொது ஒலிப்பெருக்கியில் குரல் ஒலித்தது. உடனடியாக அவர் அந்த ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தார். அங்கு அந்த நிலைய நிர்வாகி ஒரு குழந்தையைத் தூக்கிவந்தார்.

அந்தப் பிள்ளையின் தாயும் அருகே இருந்தார். உடனடியாக அந்தப் பிள்ளைக்கு முதலுதவி அளித்து அந்த அதிகாரி அந்தக் குழந்தை யைக் காப்பாற்றினார் என்று சிங்கப்பூர் ஆயுதப்படை நேற்று முன்தினம் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. அதிகாரி சுவா செங் யான் உடனடியாக, மருத்துவ உதவி வழங்கியதன் காரணமாக குழந்தை உயிர் பிழைத்தது என்று அந்தச் செய்தி குறிப்பிட்டது. எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் இயக் குநர் சியூ யோவ் வீ அந்த அதி காரிக்குப் பாராட்டுக் கடிதத்தை வழங்கினார்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் இயக்குநர் சியூ யோவ் வீ (வலமிருந்து 2வது), மருத்துவ அதிகாரி சுவான் செங் யானுக்கு (இடமிருந்து 2வது) பாராட்டுக் கடிதம் வழங்கினார். படம்: சிங்கப்பூர் ராணுவம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon